2010-03-18 15:40:15

மார்ச் 19 தவக்காலச் சிந்தனை


எழுதி வழங்குபவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச
RealAudioMP3 புனித யோசேப்பு – யாக்கோபினுடைய மகனாகவும் கன்னி மரியாளுடைய கணவராகவும் மத்தேயு நற்செய்தியாளரால் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறார். மறைவான வாழ்வை விரும்பிய இவர், அதனை வாழ்ந்து காட்டிய விதத்தை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். இவரது ஒட்டு மொத்த ஆளுமைத்தன்மையை விவிலியம் குறிப்பிடும் போது யோசேப்பு ஒரு நேர்மையாளர் என்கிறது. இவர் ஒரு நீதிமானைப் போல வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. இவர் இளகிய மனதுடையவராக, பிறரது உணர்வுகளைப் புரிந்து மதித்து வாழ்ந்தவரா, தன்னைவிட பிறருக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக வாழ்ந்தார் என்பதை மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் அவரை மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தார் என்பதிலிருந்து நாம் அறிய முடிகிறது. இறைத்திட்டம் என்ன எனபதை அறிந்தவுடன் அதனை முழுமையாக நிறைவேர்ரிய மாமனிதர் யோசேப்பு என்பது நிதர்சனமான உண்மை. திருக்குடும்பத்தின் பாதுகாவலராக விளஹ்கி அன்னை மரியாவையும் இயேசுவையும் கண்ணின்மணி போல பாதுகாத்த யோசேப்பு இன்றைய ஆண்வர்க்கத்திற்கு ஒரு மகாப் பெரிய சவாலாக விளங்குகிறார் என்பது உண்மை. எதிர்பார்ப்புகள் நிறைந்த இன்றைய சமூகத்தில் வாழ்பவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இறைவனின் திட்டத்தை தேர்ந்து தெளிந்து வாழ்ந்து காட்டிய யோசேப்பு ஒரு வாழும் முன்னுதாரணம் என்றால் மிகையாகாது. இறைநம்பிக்கையோடு தியாக வாழ்வும் உண்மை வாழ்வும் வாழ்ந்த யோசேப்புவைப் போல நாமும் வாழ முயற்சி எடுப்பது தவக்காலத்தில் நமக்கு நன்மைகள்பல தரும் என்பது உண்மை.







All the contents on this site are copyrighted ©.