2010-03-18 15:24:15

நைஜீரியாவில் நடைபெறும் கொலைகள் மதக் கலவரங்களால் அல்ல - நைஜீரியா ஆயர்


மார்ச்18,2010 நைஜீரியாவில் நடைபெறும் கொலைகள் மதக் கலவரங்களால் அல்ல; மாறாக அவை இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல்களின் எதிரொலியே என்று ஆப்ரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
இரு குழுக்களிடையில் ஏற்பட்டுள்ள மோதல்களால் நடைபெறும் இந்தக் கொலைகளை தொடர்பு சாதனங்கள் மதக் கலவரங்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது பொறுப்பற்ற ஒரு செயல் என்று ஜோஸ் (Jos) உயர் மறைமாவட்ட பேராயர் Ignatius Ayau Kaigama கூறியுள்ளார்.
இது போன்று, பன்னாட்டு தொடர்பு சாதனங்கள் தவறான செய்திகளைப் பரப்புவதால், அந்தப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் சமரச முயற்சிகள் வெளிச்சத்திற்கு வர முடியாமல் போய்விடுகிறது என்றும் பேராயர் Kaigama கூறினார்.  புலாணி (Fulani ) என்ற குழுவினர் ஒரு கிராமத்தில் உள்ள கால்நடைகளை திருடிச் சென்றதால், அந்த கிராம மக்கள் இக்குழுவினரை பதிலுக்குத் தாக்கியதில், இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில் மட்டும் 12 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.