2010-03-18 15:24:39

ஞாயிற்றுக் கிழமைகள் குடும்பத்திற்காகவும், ஓய்வுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும் - ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்து


மார்ச்18,2010 ஞாயிற்றுக் கிழமைகள் குடும்பத்திற்காகவும், ஓய்வுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஒழுங்கு முறை ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற கருத்து அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 ஐரோப்பாவில் குடிமக்களின் கருத்து வாக்கெடுப்பு (Referendum) என்ற கருவியின் மூலம் இந்த கருத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இதை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஜெர்மானிய அங்கத்தினரான Martin Kastler கூறினார்.
"Mum and Dad Belong to Us on Sunday" அதாவது, “அம்மாவும், அப்பாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களுக்கு உரியவர்கள்” என்ற தலைப்பில் இணையதளத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த கருத்தை இதுவரை 11,375 பேர் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளனர் என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
 ஞாயிற்றுக் கிழமைகள் குழந்தைகளுடன், குடும்பத்துடன் செலவிடப்பட்டால், குழந்தைகளைக் காக்கும் ஒரு சூழல் ஐரோப்பாவில் உருவாகும் என்றும், அதனாலேயே இந்தக் கருத்து வாக்கெடுப்பை முன்னின்று நடத்துவதாகவும் இரு குழந்தைகளின் தந்தையும், 35 வயது நிறைந்தவருமான Kastler கூறினார்.







All the contents on this site are copyrighted ©.