2010-03-17 15:56:00

புனித Patrick நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்தவர் - அயர்லாந்து ஆயர் Seamus Hegarty 


மார்ச்17,2010 புனித Patrick நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்தவர் என்பதால், அயர்லாந்து மக்கள் தங்கள் நாட்டை நாடி வரும் பிறநாட்டவர்களை, முக்கியமாக புலம் பெயர்ந்தோரை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளனர் என்று அயர்லாந்து ஆயர் பேரவையின் பிரதிநிதி கூறியுள்ளார்.
இப்புதனன்று கொண்டாடப்படும் புனித Patrick திருநாளைத் தேசிய திருநாளாக கொண்டாடும் வேளையில், அயர்லாந்து உலக மக்கள் அனைவரையும் வரவேற்று வாழவைக்கும் ஒரு நாடாக மாற வேண்டுமென அயர்லாந்து ஆயர் பேரவையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Seamus Hegarty கூறினார்.
அயர்லாந்துக்கு வரும் பிறநாட்டினரைப் பற்றி எண்ணும் அதே வேளையில், அயர்லாந்திலிருந்து பிற நாடுகளுக்கு, சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்றுள்ள தங்கள் நாட்டினரையும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும், அவர்களும் விரைவில் தாங்கள் குடிபெயர்ந்து சென்றுள்ள நாடுகளில் அதிகாரப் பூரவமாக வாழும் வழிகள் செய்யப்பட வேண்டுமெனவும் ஆயர் Hegarty கூறினார்.ஒவ்வொரு நாட்டிலும் அகதிகளாக, புலம் பெயர்ந்தோராக புகலிடம் தேடும் மக்களை வரவேற்று அவர்களுடன் தங்கள் ஒன்றிப்பை காட்டுவதே கிறிஸ்தவர்களின் கடமை என்று மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கூறியதையும் எடுத்துக்காட்டினார் ஆயர் Hegarty.







All the contents on this site are copyrighted ©.