2010-03-17 15:43:27

சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை


மார்ச்17,2010 இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணை ஒன்று இச்செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த விசாரணைகளின் போது, அவர் இராணுவ பதவியில் இருந்தபோதே, அரசியலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.
அதேவேளை அவர் மீதான மற்றுமொரு விசாரணை இப்புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அந்த விசாரணையின் போது இராணுவ தளவாடங்களைப் பெறுவது குறித்த விதிகளை அவர் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
இந்த குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொன்சேகா ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெறுவார் என்று தெரிகிறது.
பொன்சேகா மக்கள் நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்பட வேண்டுமேயொழிய இராணுவ நீதிமன்றத்திற்கு முன் விசாரிக்கப்படுவது முறையல்ல என்று இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி Sarath Shiva கூறியுள்ளார்.
இந்த விசாரணைகள் அரசியல் காரணங்களுக்காவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், வரும் ஏப்ரலில் தான் தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் முயற்சி இதுவென்றும் பொன்சேகா கூறினார்.ஏப்ரல் மாதம் 6ஆம் தேதிக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.