2010-03-16 14:52:35

ரோம் நகரில் திருப்பீடத்திற்கும் சர்வதேச யூத அவைக்கும் இடையேயான கூட்டம்


மார்ச் 16, 2010. திருப்பீட அதிகாரிகளுக்கும் சர்வதேச யூத அவைக்கும் இடையேயான இரண்டு நாள் கருத்து பரிமாற்றக் கூட்டம் தற்போது ரோம் நகரில் இடம்பெற்று வருகின்றது.

யூத அவையின் சார்பில் யூத மதக்குரு ரிச்சர்ட் மார்க்கர் தலைமையிலான குழுவும், திருப்பீடத்தின் சார்பில் ஆயர் ப்ரையன் ஃபாரெல் தலைமையிலான குழுவும் பங்குகொள்ளும் இக்கூட்டத்தில் திருத்தந்தை 12ம் பத்திநாதருக்கு புனிதர் பட்டம் வழங்கும் முயற்சிகள் தொடர்புடைய பிரச்னைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

பிறமதங்களுடன் ஆன பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினல் Jean Louis Tauranடன் செவ்வாய் காலை சந்திப்பை முடித்த இக்குழுவினர், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயை புதனன்று சந்திக்கவுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.