2010-03-15 14:50:21

மரண தண்டனைகளின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் குறைந்துள்ளது. - கத்தோலிக்க San Egidio அமைப்பு தெரிவிக்கிறது


மார்ச்15,2010. மரண தண்டனைக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து, மரண தண்டனைகளின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் குறைந்துள்ளதைக் காண முடிகிறது என மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் கத்தோலிக்க San Egidio அமைப்பின் Mario Marazziti.
உலகில் 56 நாடுகளே மரண தண்டனையைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன, 141 நாடுகளில் அண்மைக் காலங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்ற San Egidio அமைப்பின் அதிகாரப் பூர்வ பேச்சாளர், 2008ஆம் ஆண்டில் உலகில் 2,390 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற Amnesty International மனித உரிமைகள் நிறுவனத்தின் கூற்றையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
1970ம் ஆண்டுகளில் 23 நாடுகளே மரண தண்டனை விதிப்பதிலிருந்து விலகியிருக்க, தற்போதோ 93 நாடுகளில் மரண தண்டனை அதிகாரப் பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார் அவர்.2008ஆம் ஆண்டில் சைனாவிலேயே அதிக எண்ணிக்கையில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சைனாவில் 1,718 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டாவதாக வரும் ஈரானிலோ அது 346 ஆகும்.







All the contents on this site are copyrighted ©.