2010-03-13 14:42:50

இலங்கையில் கால்களை இழந்த 1,000 தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்குவதற்கென இந்திய பிறரன்பு அமைப்பு உதவி


மார்ச்13,2010 இலங்கையின் உள்நாட்டு சண்டையில் கால்களை இழந்த 1,000 தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்குவதற்கென இந்திய பிறரன்பு அமைப்பு ஒன்று தனது ஆட்களை அனுப்பியுள்ளது.

'Jaipur foot' அதாவது “ஜெய்ப்பூர் பாதம்” என்றழைக்கப்படும் செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் BMVSS என்ற பிறரன்பு அமைப்பின் பணியாளர்கள் வவுனியாவில் ஒருமாதம் தங்கி இப்பணிகளைச் செய்வார்கள் என்று அந்நிறுவனத்தை ஆரம்பித்த டாக்டர் மெக்தா (Mehta) கூறினார்.

இன்னும் சில நாட்களில் ஈராக்கிற்கும் இந்த அமைப்பின் பணியாளர்கள் செல்லவிருக்கிறார்கள் என்றும் மெக்தா தெரிவித்தார்.

இந்தியாவின் இராஜஸ்தானிலுள்ள BMVSS பிறரன்பு அமைப்பானது, ஆப்கானிஸ்தான், லெபனன், நைஜீரியா, பாகிஸ்தான், ருவாண்டா, சொமாலியா, சூடான், சியெரா லியோன் ஆகிய நாடுகள் உட்பட உலகின் பல பாகங்களில் 3,50,000த்துக்கு மேற்பட்டவர்களுக்கு செயற்கை கால்களை வழங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.