2010-03-12 16:08:01

நேபாளத்தில் கத்தோலிக்கத் திருச்சபை வளர்ந்து வருகிறது


மார்ச்12,2010 இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நேபாளத்தில் கத்தோலிக்கத் திருச்சபை வளர்ந்து வருகிறது மற்றும் கத்தோலிக்கப் பொதுநிலை குழுக்கள் நாட்டுக்கானத் தங்களது பணிகளை விரிவுபடுத்தி வருகின்றனர் என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

ஹாங்காங், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் வின்சென்ட் தெ பவுல் பக்த சபைக் குழு ஒன்று காட்மண்ட் மற்றும் மேற்கு பொக்ஹாரா நகர்களுக்கு மார்ச் 7 முதல் 11 வரை பயணம் மேற்கொண்டு தங்கள் சபையின் நற்பணிகள் குறித்து விளக்கியுள்ளனர்.

இக்குழுவின் பயணம் குறித்து பேசிய நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் அந்தோணி ஷர்மா, வின்சென்ட் தெ பவுல் சபையினரின் பகிர்வுகள், கத்தோலிக்கருக்கும் மற்றவருக்கும் அதிகம் உதவும் என்ற நம்பிக்கைய தெரிவித்தார்.

இந்தியா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து அருட்சகோதரிகள் தங்கள் பணிகளைத் துவக்கவுள்ளனர் என்றும் சொல்லப்ப்டடுள்ளது







All the contents on this site are copyrighted ©.