2010-03-11 15:02:39

மார்ச்12 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1622 – இயேசு சபையை நிறுவிய புனித இலொயோலா இஞ்ஞாசியார் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

1894 - முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.

1913 - ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் கான்பரா என்று அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது. புதிய தலைநகர் கான்பரா அமைக்கப்படும் வரையில் அதாவது 1927ம் ஆண்டு வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது.

1918 - 215 ஆண்டுகளாக ரஷ்யாவின் தலைநகராக இருந்த செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகருக்குப் பதிலாக மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.

1930 - பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார் மகாத்மா காந்தி.

1954 - சாகித்ய அக்காடாமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.

1968 - மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது

1993- மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.