2010-03-11 09:29:55

மார்ச், 11 தவக்காலச் சிந்தனை


தவக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருட்பணி பவுல்ராஜ், சே.ச.

RealAudioMP3 இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்ட அவர் பேசுகிறார். இந்த நற்செயலைக் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்தனர் என்றும் சிலர் பேய்களின் தலைவன் பெயல்செபூலைக் கொண்டு இவன் பேய் ஓட்டுகிறான் என்றும் வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன் வானத்திலிருந்து ஓர் அடையாளம் காட்டுமாறும் கேட்டதாகவும் இன்றைய நற்செய்தி கூறுகிறது.

ஒரு செயல் பல்வேறு வளைவுகளை ஏற்படுத்தும் என்பது யதார்த்தம். ஆனால், ஒரு செயல் நல்லதா, தீயதா என்பதை அதன் விளைவுகளைப் பார்த்து கணிப்பதை விட யார் பார்க்கிறார் என்பதற்கேற்ப அமைவதாக இன்றைய நற்செய்தி வழியில் நாம் அறிய  முடிகிறது. இயேசுவின் ஒரு நற்செயல் வியப்பையும், பொறாமையையும், கபட உணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. நான் வாழும் சூழலில், நற்செயல் நிகழும் போது நான் எந்த மன நிலையில் அதனைச் சந்திக்கிறேன் என்று இன்று சிந்திப்பது நமக்கு நலம் பயக்கலாம். இயேசுவோடு இல்லாதவர் அவருக்கு எதிராக இருக்கிறார்; இயேசுவோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைத் திட்டமிட்டு சிதறடிக்கிறார்.

நாம் யார் முகாமில் இருக்கிறோம்? இருக்க விரும்புகிறோம்?

கிறிஸ்துவின் முகாமிலா? அல்லது பெயல்செபூலின் முகாமிலா?

மதில் மேல் பூனையாக எவ்வளவு வருடங்கள் தான் காலம் கடத்துவது?

முடிவெடுப்போம் இன்றே!
செயல்படுத்துவோம் இந்த தவக்காலத்தில்!







All the contents on this site are copyrighted ©.