2010-03-11 15:44:38

ஐ.நா.அவைக் கூட்டத்தில் திருப்பீட பிரதிநிதி பேராயர் Silvano Tomasi உரை


மார்ச்11,2010 சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல, மிகப் பெரிய பாவமும் கூட என்ற திருத்தந்தை 16ம் பெனெடிக்டின் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை ஐ.நா.அவைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார் திருப்பீட பிரதிநிதி பேராயர் Silvano Tomasi.
குழந்தைகள் இளவயதிலேயே பாலின முறையில் தவறாக நடத்தப்படுவதால், இளவயது கர்ப்பம் தரித்தல், வீடற்ற நிலை, போதைப் பொருட்களில் சுகம் காணல் போன்றவை அவர்களில் அதிகரிக்கின்றன என்ற ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் Tomasi, கடந்த ஆண்டுகளில் சில நாடுகளில் கத்தோலிக்க குருக்கள் மற்றும் பணியாளர்கள் இத்தகைய தவறான பாலின நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும், அவைகளுக்கான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். இத்தகைய தவறுகள் மீண்டும் நடைபெறாவண்ணம் சிறார்களின் பாதுகாப்பை மனதிற் கொண்டு, உரிய நடவடிக்கைகள் திருச்சபையில் எடுக்கப்பட்டு வருவதையும் எடுத்தியம்பினார் பேராயர் Tomasi.







All the contents on this site are copyrighted ©.