2010-03-10 15:27:31

Apple கணனி நிறுவனத்தின் iPhone கருவியின் பயன்பாடுகளில் பலவற்றை கத்தோலிக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்


மார்ச்10,2010 இவ்வாண்டு இங்கிலாந்து செல்லும் திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு தங்களையே தயாரிக்கும் வகையில் செபமாலைகள் சொல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் Prayer Beads App என்ற iPhone பயன்பாட்டை அந்நாட்டில் உள்ள Premier Christian Media என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளது.
இந்த பயன்பாடு இந்த மார்ச் மாதம் முதல் மக்களுக்குக் கிடைக்கும் என்றும் இந்த முயற்சிக்கு திருப்பீடத்திலிருந்து வரவேற்பு கிடைத்துள்ளதென்றும் இந்த நிறுவனத்தின் வர்த்தக மேற்பார்வையாளர் ரிச்சர்ட் ஸ்மார்ட் தெரிவித்துள்ளார்.
இதேபோல், இம்மாதத்தில் Ave Maria Press என்ற நிறுவனம் iPhone வழியே சிலுவைப் பாதை முயற்சிகளை வெளியிட உள்ளதாகவும் இந்த முயற்சி மார்ச் 19 ஆம் தேதி Los Angeles நகரில் ஆரம்பமாகும் ஒரு கருத்தரங்கில் வெளியிடப்படும் என்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.Apple கணனி நிறுவனத்தின் iPhone கருவியில் 14 கோடி பயன்பாடுகள் உள்ளன என்றும், இந்த பயன்பாடுகளில் பலவற்றை கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தை மேம்படுத்த பயன்படுத்தி வருகின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.