2010-03-08 16:22:27

ஸ்பெயினில் கருக்கலைப்பை எளிதாக்கும் புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு


மார்ச்08,2010 ஸ்பெயின் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் தமது கருவை கலைப்பதை இலகுவாக்கும் புதிய சட்டத்தை கண்டித்து பல்லயிரக்கணக்கான ஸ்பானிய பொதுமக்கள் தலைநகர் மத்ரிதில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கர்ப்பம் அடைந்த 14வது வாரம் எந்தவித சிரமும் இல்லாமல் தனது கருவை கலைக்க தாய்க்கு அனுமதிக்க கொடுக்கும் புதிய சட்டம் ஸ்பெயின் நாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

கருக்கலைப்பை அரசு இலகுவாக்கியுள்ளது என்று சிலர் கண்டித்துள்ளார்கள். இன்னும் சிலரோ கருகலைக்கும் உரிமையை 24 வாரங்கள் வரையில் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

ஸ்பெயின் நாட்டில் பழமைவாதிகளையும் கத்தோலிக்க மதத்தையும் மிகவும் ஆத்திரப்பட வைத்துள்ள சட்டச்சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.








All the contents on this site are copyrighted ©.