2010-03-08 16:19:36

வீடுகளில் பணி செய்வோர் சட்ட ரீதியாக உரிமைகள் பெற வேண்டும் - அகில உலக காரித்தாஸ் நிறுவனம்


மார்ச்08,2010 வீடுகளில் பணி செய்வோர் மற்ற பணியாளர்களைப் போல் உரிமைகள் பெற வேண்டும் என்று அகில உலக காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.

வீடுகளில் பணி செய்வோர் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர். இவர்கள் சட்ட ரீதியாக எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் பணிகளுக்கு அமர்த்தப்படுவதால், பல்வேறு வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர். எனவே, அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் இந்த அநீதியைக் களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.

பன்னாட்டுத் தொழில் அமைப்பு (ILO – Internatinoal Labour Organisation) என்ற ஐ.நா.வின் அங்கம், வீட்டுப் பணி செய்பவர்களின் நிலை குறித்த ஒரு அறிக்கையைக் கவனமாக ஆய்ந்து வருவதாகவும், இந்த ஆய்வுக்குப்பின் இப்பணிகளைச் செய்வோருக்கான, சிறப்பாக நாடு விட்டு நாடு சென்று இப்பணிகளை மேற்கொள்வோருக்கான உரிமைகளை உறுதி செய்யும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.