2010-03-08 15:39:55

மார்ச் 09 தவக்கால சிந்தனை


RealAudioMP3 ஓஷோ அவர்களது கடுகு விதை என்ற நூலில் “இயேசு கிறிஸ்து உண்மையான இறைமகன் என்பதற்கு அவரது மன்னிப்பு பற்றிய போதனையும், சிலுவைச்சாவு வரைதான் போதித்த பகைவரையும் மன்னித்து அன்பு செய்த உம்மை வாழ்வும்தான் ” எனக் குறிப்பிடுகிறார். இறைத்தந்தையினுடைய மன்னிக்கும் குணத்தை இயேசு தனசு வாழ்விலே முழுமையாக வாழ்ந்து காட்டினார் என்பதை நற்செய்தியில் அவர் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் வழியாக நாம் கண்டுணர முடிகிறது. பேதுருவினுடைய கேள்விக்கு “ஏழுமுறை மட்டுமல்ல பிறரை மன்னிப்பதற்கு; மாறாக எழுபது தடவை ஏழுமுறை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” எனப் புதிய இறையரசுப் பாடத்தை பதிலாக வழங்குவதில் இருந்து இயேசுவின் மன்னிப்பிற்கான அர்த்தம் நமக்கு விளங்குகிறது. மன்னிப்பு என்பது இயேசுவைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு பரிந்துரையல்ல. அது ஓர் அறக்கட்டளை. எனவேதான் இயேசு “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்” என அன்புடன் கூடியஅறக்கட்டளையிடுகிறார்.

மன்னிக்கத் தெரிந்தவர் மனிதர்.

மன்னித்து மறக்கத் தெரிந்தவர் மாமனிதர்.(எழுதி வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)








All the contents on this site are copyrighted ©.