2010-03-08 16:17:02

உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாவதையொட்டி இணையதளம் ஒன்றை தென்னாப்ரிக்க ஆயர்கள் ஆரம்பித்துள்ளனர்


மார்ச்08,2010 இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாக உள்ள இந்த நேரத்தில் கத்தோலிக்கருக்கும், பிறருக்கும் தேவையான விவரங்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றை தென்னாப்ரிக்க ஆயர்கள் ஆரம்பித்துள்ளனர்.

இந்த இணையதளத்தில் உள்ள Virtual Chapel என்ற இணைப்பின் வழியாக தங்கள் அணிக்கான செபங்களை வேண்டும் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இந்த இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எந்த ஒரு விளையாட்டுப் போட்டியிலும் வெற்றி பெற பொறுமை, விடாமுயற்சி போன்ற சமுதாயத்திற்குத் தேவையான உயர்ந்த மதிப்பீடுகள் தேவையாகின்றன, சிறப்பாக இம்மதிப்பீடுகள் ஆபிர்க்காவிற்கு மிக அதிகம் தேவைப்படுகிறது என்பதால், இந்த மதிப்பீடுகளை பரப்பும் ஒரு முயற்சி இந்த இணையதளம் என்று இணையதளத்தை ஆரம்பித்து வைத்த டர்பன் உயர்மறை மாவட்ட பேராயர் கர்தினால் Wilifred Napier கூறினார்.

ஆன்மீகத்திற்குத் தேவையான பல தகவல்களை வழங்கும் இந்த இணையதளம், இந்தப் போட்டி நேரங்களில் பெண்கள் விலைபேசப்படுதல், HIV-AIDS போன்ற சவால்களைக் குறித்தும் மக்களுக்கு உணர்த்தும் என்று கர்தினால் Napier மேலும் கூறினார்.

தென்னாப்ரிக்காவின் கலாச்சாரம், தென்னாப்ரிக்கத் திருச்சபை குறித்த விவரங்களையும் இந்த இணையதளத்தில் பெற முடியும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.