2010-03-06 15:21:19

சமூக விவகாரங்களைத் தீர்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது - பிரிட்டன் ஆயர்கள்


மார்ச்06,2010 பிரிட்டனில் வருகிற ஜூனில் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தல்கள், செப்டம்பரில் இடம்பெறவிருக்கின்ற திருத்தந்தையின் திருப்பயணம் ஆகிய இவற்றை மையப்படுத்தி அந்நாட்டு ஆயர்கள் சிறிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் இணைந்து வெளியிட்ட 19 பக்க ஏட்டில், பிரிட்டன் தற்போது எதிர்நோக்கும் சமூக விவகாரங்களை அரசு தீர்க்க வேண்டும் என்று ஒதுங்கி இருப்பதை விடுத்து அதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்ற எண்ணத்தில் அனைவரும் செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அன்பும் உண்மைக்கான தாகமும் மனித இயல்பின் உள்ளார்ந்த கூறுகள் என்பதால், இப்பண்புகளை உள்ளடக்கியுள்ள நீதியான சமுதாயம் கட்டி எழுப்பப்பட அனைவரும் உழைக்குமாறு பிரிட்டன் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுநலனைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பிலான ஆயர்களின் ஏடு, வறுமை, சமத்துவமின்மை, முதியோர், குடியேற்றதாரர், சமூக உறவுகள் உலக சமுதாயம், சுற்றுச்சூழல், திருமணம், குடும்ப வாழ்வு, சமயக் குழுக்களின் பங்கு போன்ற தலைப்புக்களை உள்ளடக்கியுள்ளது







All the contents on this site are copyrighted ©.