2010-03-05 14:45:43

அமெரிக்க ஐக்கிய நாட்டு பாரம்பரிய ஆங்லிக்கன் கிறிஸ்தவசபை கத்தோலிக்கத் திருச்சபையில் முழுவதுமாக இணைவதற்குத் தீர்மானம்


மார்ச்05,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடந்த நவம்பரில் உலக ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையினருக்கு விடுத்திருக்கும் அழைப்புக்குப் பதில் அளிக்கும் விதமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு பாரம்பரிய ஆங்லிக்கன் கிறிஸ்தவசபைத் தலைவர்கள், கத்தோலிக்கத் திருச்சபையில் முழுவதுமாக இணைவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு Orlando வில் கூடிய பாரம்பரிய ஆங்லிக்கன் கிறிஸ்தவசபைத் தலைவர்கள், கத்தோலிக்கத் திருச்சபையில் முழுவதுமாக இணைவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ACA எனப்படும் அமெரிக்காவில் ஆங்லிக்கன்சபை என்ற இந்தச் சபையில் 5200 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்தப் பாரம்பரிய ஆங்லிக்கன் கிறிஸ்தவசபை கூட்டமைப்பில் உலகெங்கும் சுமார் நான்கு இலட்சம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆஸ்திரேலிய ஆங்லிக்கன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவரான பேராயர் John Hepworth கள் இந்தக் கூட்டமைப்பின் தலைவராவார்.








All the contents on this site are copyrighted ©.