2010-03-03 15:19:12

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் உலகச் சாதனை செய்த Stella Kim Yu-na தென் கொரிய கத்தோலிக்கரின் பெருமை


மார்ச்03,2010 அண்மையில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் உலகச் சாதனை செய்த 19 வயதான Stella Kim Yu-na போட்டியில் பங்கேற்குமுன் சிலுவை அடையாளத்தை வரைந்து கொண்டது நற்செய்தியைப் பரப்பும் வேறொரு வடிவம் என்று கொரிய ஆயர்களின் சமூகத் தொடர்புக் குழுவின் செயலர் அருட்திரு Ignatius Kim Min-soo கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று கனடாவின் Vancouver நகரில் நிறைவு பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் Figure Skating எனும் பனித்தள போட்டியில் முதன் முறையாக ஒரு கொரிய நாட்டவர் பரிசு பெற்றிருப்பதும் அதுவும் 2008ஆம் ஆண்டு தன் அன்னையுடன் கத்தோலிக்கராய் மாறிய ஒரு பெண் அந்தப் பெருமையைப் பெற்றிருப்பதும் தங்கள் நாட்டுக்கும் தலத் திருச்சபைக்கும் எல்லையற்ற மகிழ்வைத் தரும் செய்தி என்று Seoul உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் Nicholas Cheong Jin-suk கூறியுள்ளார்.பிப்ரவரி 12 முதல் 28 வரை நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தென் கொரியா ஆறு தங்கம், ஆறு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றாலும், Kim என்ற இந்த இளம்பெண் பெற்ற தங்கமும், உலகச் சாதனையும் அந்தப் பெண்ணை ஒரு தேசிய எடுத்துக்காட்டாக மாற்றியுள்ளதென செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.