2010-03-03 15:20:19

இணையதளத்தை ஆபத்தில்லாத வழிகளில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த பயிற்சிப் பாசறை


மார்ச் 03,2010 இணையதளத்தை எவ்வாறு ஆபத்தில்லாத வழிகளில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லித் தரும் நோக்கோடு அண்மையில் நடத்தப்பட்ட ஒரு வார பயிற்சிப் பாசறையில்  இங்கிலாந்தின் Manchester ல் உள்ள புனித பவுல் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
‘Think Before you Post’ அதாவது, இணையதளத்தில் எதையும் பதிவு செய்வதற்கு முன் சிந்திக்கவும் என்ற மையக் கருத்துடன் நடத்தப்பட்ட இந்த பயிற்சிப் பாசறையில் 7 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பல சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். தாங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் செல்லிட பேசி, இணையதளம் போன்றவைகளில் உள்ள பல ஆபத்துக்கள் இந்த இளவயதினருக்குத் தெளிவாக விளக்கப்பட்டன. இன்றைய தொடர்பு சாதனங்கள் பல வகைகளிலும் நன்மைகளைக் கொணர்ந்தாலும், இவைகளில் உள்ள ஆபத்துக்களை இந்த இளம் வயதிலேயே இவர்கள் உணர்ந்து, அந்த ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டியே இந்தப் பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டதென புனித பவுல் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு Wiktor Daren தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.