2010-03-02 15:23:37

பாகிஸ்தானில் இரு கத்தோலிக்கர்கள் தேவநிந்தனை குற்றத்திற்காக ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளனர்


மார்ச்02,2010 பாகிஸ்தானில் இரு கத்தோலிக்கர்கள் தேவநிந்தனைக் குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றங்களால் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக இசுலாமாபாத்-ராவல்பிண்டி பேராயர் ரூஃபின் அந்தோணி தனது கவலையை வெளியிட்டார்.

தனிப்பட்ட விரோதங்களுக்காக அண்டை வீட்டார் உமார் டேவிட், இம்ரான் மாசிக் ஆகிய இரண்டு கத்தோலிக்கர்களின்மீது தேவநிந்தனைக் குற்றம் சாட்டி ஆயுள்தண்டனை பெற்றுத் தந்துள்ளதைக் குறித்து இவ்வாறு கவலையை வெளியிட்டார் பேராயர் அந்தோணி.

இத்தண்டனைகள் குறித்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிறிஸ்தவக் கல்வி மையத்தின் இயக்குனர் பிரான்சிஸ் மெஹ்பு சாடா, பாகிஸ்தான் சமூகத்தின் பல்வேறு நடவடிக்கையாளர்களுடன் இணைந்து இந்த அநீதியான சட்டத்தை நீக்கப் போராடி வருவதாகக் கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படும் இச்சட்டம், நாட்டிற்கு தேவையற்றது என மேலும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.