2010-03-02 15:37:21

கென்யாவின் புதிய அரசியலமைப்பில் கருக்கலைத்தல் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட மாட்டாது : கென்ய அரசுத் தலைவர்


மார்ச் 02,2010 கென்யாவில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பில் கருக்கலைத்தல் நிலைப்பாடு குறித்து முரண்பாடான கருத்துக்கள் பரப்பப்படுகின்ற போதிலும், கருக்கலைத்தல் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட மாட்டாது என உறுதி கூறியுள்ளார் அந்நாட்டு அரசுத் தலைவர் Mwai Kibaki.

கென்யாவின் Nakura வின் ஆயராக Maurice Muhatia Makumba பதவியேற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அரசுத் தலைவர், கருக்கலைத்தலை சட்ட ரீதியாக அனுமதிக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் தன் ஆதரவு இருக்காது என தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கலந்து கொண்ட Nairobiயின் கர்தினால் John Njue கருக்கலைத்தலை சட்ட பூர்வமாக்க முயலும் அரசியலமைப்பைத் திருச்சபை ஏற்காது என்றார்.

கலாச்சாரத்தால் மதிக்கப்படும் மற்றும் கிறிஸ்தவ விசுவாசத்தால் ஊக்குவிக்கப்படும் அடிப்படை ஒழுக்கரீதி மதிப்பீடுகளைக் களைய முயல்வது எந்த ஒரு அரசியல் அமைப்புக்கும் நல்லதல்ல என மேலும் கூறினார் கர்தினால்.










All the contents on this site are copyrighted ©.