2010-03-02 15:39:17

அரசியல் ஆதாயங்களை நியாயப்படுத்த மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர் இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கப் பிரதிநிதிகள்


மார்ச்02,2010 வன்முறை, பாகுபாட்டு நிலைகள் மற்றும் அரசியல் ஆதாயங்களை நியாயப்படுத்த மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு எதிராகத் தங்கள் குரலை எழுப்பியுள்ளனர் இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கப் பிரதிநிதிகள்.

மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான அவையின் அங்கத்தினர்களுக்கும் Sunni இஸ்லாமியர்களின் Al Azhare நிரந்தர அவையின் அங்கத்தினர்களுக்கும் இடையே அண்மையில் எகிப்தின் கெய்ரோவில் இடம் பெற்ற கூட்டத்தின் இறுதியில் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இத்திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran மற்றும் Sunni இஸ்லாமியத் தலைவர் Sheik Muhammed Abdal Azid Wasil இணைந்து கையெழுத்திட்ட இத்தீர்மான அறிக்கை, சுய ஆதாயங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.