2010-03-01 15:56:59

மார்ச் 02 வரலாற்றில் இன்று இடம் பெற்றவை


1815 - கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்

1823 - ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது

1919 - அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர்.

1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்

1939 கர்தினால் யூஜினியோ பசெல்லி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே திருத்தந்தை12ம் பத்திநாதர்.

1935 - வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தார்.

1956 மொராக்கோ பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது.

1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

1949 - இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் சரோஜினி நாயுடு இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.