2010-03-01 16:08:15

மார்ச் 01 தவக்கால சிந்தனை


கலி காலங்க. இந்த சின்னப் புள்ளங்களப் பாருங்க சின்ன வயசிலேயே என்னமா பேசுதுங்க பாருங்க. இதுகள நினைச்சா ரொம்பப் பயமா இருக்குங்க. அதுக்கு முன்னாடி நாம போயிடனும்… சிறு குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பார்த்துப் பெரியவர்கள்.

நம்ம காலம் மாறி இல்லீங்க. இளவட்டப் பசங்களுடைய உலகமே வேறங்க. பைக் சிகரெட் பொண்ணுங்க. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லீங்க. எதாவது கேட்டோம்னா ஜெனெரேசன் கேப்ன்றாங்க. என்னத்தச் சொல்றதுக்கு இருக்கு... இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள்.

இந்தப் பெருசுகளோட ஒரே ரோதனையாப் போச்சுடா. முன்னப் போனா இடி பின்ன வந்தா உதை எதுக்கெடுத்தாலும் திட்டுஉதவாக்கரைன்ற பட்டம். இதுகள நினச்சா செத்துப் போயிடலாம் போல இருக்குடா... பெரியவர்களைப் பார்த்து இளைஞர்கள்.

அழுது நீலிக் கண்ணி வடிக்காதடி. பல்லக் கழட்டிருவேன்... மனைவிகளைப் பார்த்து கணவர்கள்.

இந்த ஆளக் கட்டுனதுக்கு ஒரு கல்லக் கட்டியிருக்கலாம். தெண்டம்... கணவர்களைப் பார்த்து மனைவிகள்.

இது ஒரு சாம்பிள்தாங்க. இதைப் போன்று எவ்வளவோ. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறுவது: "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மாறாக மன்னியுங்கள்."

எனவே பிறரைத் தீர்ப்பிட வேண்டாம். பிறரிடம் உள்ள நன்மைத் தனத்தைக் கண்டறிவோம். அதனை உலகறிய எடுத்தியம்புவோம்-வழங்கியவர் அருள்தந்தை பவுல்ராஜ், சே.ச.








All the contents on this site are copyrighted ©.