2010-03-01 15:51:14

பிலிப்பைன்சில் சுரங்கங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படுமாறு சமூகநடவடிக்கையாளர் ஒருவர் அழைப்பு


மார்ச்01,2010 பிலிப்பைன்சில் கனிவளச் சுரங்கங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படுமாறு அந்நாட்டு ஆயர் பேரவையின் சமூகநடவடிக்கை ஆணையத்தின் புதிய செயலர் அருட்பணி Edwin Gariguez அழைப்பு விடுத்தார்.

பிலிப்பைன்ஸ் அரசின் தற்போதைய சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழ் பொறுப்பான கனிவளச் சுரங்கங்கள் அமைக்கப்படுவது இயலாதது என்று இஞ்ஞாயிறன்று கூறினார்.

சர்வதேச கனிவளச்சுரங்கக் கம்பெனிகள் மக்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச் சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றுரைத்த அக்குரு, 1995ம் ஆண்டின் சுரங்கங்கள் பற்றிய விதிமுறை அகற்றப்பட்டு காங்கிரஸ் அவையில் புதிய மாற்று மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.