2010-03-01 15:46:39

நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சிலே நாட்டு மக்களை திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.


மார்ச்01,2010 இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் பேசிய திருத்தந்தை, நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சிலே நாட்டு மக்களை நினைவுகூர்ந்தார்.

கடும் நிலநடுக்கத்தால் எண்ணற்ற மனித உயிர்கள் பலியாகிப் பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு பலர், குறிப்பாக திருச்சபை நிறுவனங்கள் அந்நாட்டினருக்கு உதவுவார்கள் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடான சிலேயில் இச்சனிக்கிழமை 8.8 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் தலைநகர் சன்டியாகோ, கன்செப்ஷன் மற்றும் குரிக்கோ நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், ஏறத்தாழ ஐந்து இலட்சம் வீடுகள் பயங்கரமாய்ச் சேதமடைந்துள்ளன, சுமார் 15 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் மற்றும் உணவுக்காக மக்கள் சூப்பர் மார்கெட் கதவுகளை உடைத்து பொருள்களை எடுத்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

தாமிரச் சுரங்கங்கள் அதிகமுள்ள சிலே நாடு, செப்பு உலோக உற்பத்திக்கு புகழ் பெற்றது. இந்நிலநடுக்கத்தில் பல சுரங்கங்கள் சேதமடைந்து விட்டன.








All the contents on this site are copyrighted ©.