2010-02-27 16:48:44

மனிதன் கடவுள் பேசுவதை உற்றுக் கேட்க வேண்டும் திருத்தந்தை


பிப்.27,2010 மனிதன் தன்னிலே நிறைவானவன் அல்ல, மாறாக அவனுக்கு உறவுகள் தேவைப்படுகின்றன மற்றும் அவன் உறவுகளில் வாழ்கிறவன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இச்சனிக்கிழமை காலை தவக்கால ஆண்டு தியானத்தை முடித்து தியான மறையுரைகள் வழங்கிய சலேசிய சபை அருள்தந்தை என்ரிக்கோ தல் கொவோலோவுக்கு அனைவர் சார்பாக நன்றி தெரிவித்த திருத்தந்தை, மனிதனுக்கு உற்றுக் கேட்டல் அவசியம், அவன் பிறருக்கும், எல்லாவற்றிகும் மேலாக கடவுளுக்கும் அவன் உற்றுக் கேட் வேண்டும் என்று கூறினார்.
அப்பொழுதுதான் மனிதன் தன்னோடும் பிறரோடும் இணங்கி வாழ முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அன்னைமரியா எவ்வாறு இறைவார்த்தையை உற்றுக் கேட்டாள் என்பதை விளக்கிய திருத்தந்தை, குருத்துவத்தின் எடுத்துக்காட்டுகளாயத் திகழ்ந்த ஐந்து முக்கிய திருச்சபைத் தந்தையர் பற்றி இத்தியானத்தில் அதிகம் கேட்க முடிந்தது என்றார்.
இச்சர்வதேச குருக்கள் ஆண்டில் இத்தியானம் குருத்துவ அழைத்தலை மையமாகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இத்தியானம் திருத்தந்தைக்கு ஆழமான ஆன்மீக அனுபவமாக இருந்தது என்று திருப்பீடப் பேச்சாளர் பெடரிக்கோ லொம்பார்தி சே.ச. கூறினார்.







All the contents on this site are copyrighted ©.