2010-02-27 16:49:02

பிள்ளைகள் வளர்வதற்கு ஒன்றிணைந்த குடும்பங்கள் அவசியம் - கர்தினால் அந்தோனெல்லி


பிப்.27,2010 பிள்ளைகள் வளர்வதற்கு ஒன்றிணைந்த குடும்பங்கள் இன்றியமையாதவை என்று திருப்பீட குடும்ப அவைத் தலைவர் கர்தினால் என்னி அந்தோனெல்லி கூறினார்.
“குடும்பமும் தொழிலும் : சமூகத்தின் முக்கிய கூறுகள்” என்ற தலைப்பில் இத்தாலிய கத்தோலிக்கத் தொழில் அதிபர்களுக்கு உரையாற்றிய கர்தினால் அந்தோனெல்லி, குழந்தைகளின் எதிர்காலம் குடும்பங்கள் அமைவதைப் பொறுத்தே இருக்கின்றது என்றும் கூறினார்.
மேற்கத்திய உலகின் பல பகுதிகளில் குடும்பங்களின் நிலை அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், சேர்ந்து வாழாத பெற்றோரின் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிவந்த முடிவுகள் பற்றி சுட்டிக் காட்டினார்.மேற்கத்திய உலகின் பல பகுதிகளில் வீடற்ற மக்களில் 90 விழுக்காட்டினரும், தற்கொலை செய்யும் இளையோரில் 72 விழுக்காட்டினரும், கற்பழிப்போரில் 60 விழுக்காட்டினரும், சிறையிலுள்ள இளையோருள் 85 விழுக்காட்டினரும் தந்தையின்றி வளர்நதவர்கள் என்ற அந்த ஆய்விந் முடிவையும் குறிப்பிட்டுப் பேசினார் கர்தினால் என்னி அந்தோனெல்லி.







All the contents on this site are copyrighted ©.