2010-02-27 16:51:16

சூ கி நிலைமை குறித்து ஐ.நா.பொதுச்செயலர் கவலை


பிப்.27,2010 மியான்மாரின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சாங் சூ கி தனது வீட்டுக்காவல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது குறித்து ஐ.நா.பொதுச்செயலர் கவலை தெரிவித்துள்ளார்.
நிராகரிப்புக்கான காரணத்தை நீதிமன்றம் வெளியிடவில்லையென்றும் மியான்மாரின் தலைமை நீதிபதிக்கு தாம் விசேட மேன்முறையீட்டை சமர்ப்பிக்க இருப்பதாகவும் ஆங்சாங் சூச்சியின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
1990ம் ஆண்டில் மியான்மாரில் கடைசியாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ஆங்சாங் சூ கி யின் கட்சி அமோக வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் பெரும் பகுதிக்காலத்தை ஆங் சாங் சூ கி, இராணுவ ஆட்சியின் தடுப்புக்காவலில் கழித்து வருகின்றார்.
அப்போது தேர்தல் முடிவுளை அலட்சியம் செய்த இராணுவ ஆட்சியாளர்கள், இவ்வாண்டின் பிற்பகுதியில் புதிய தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தத் தேர்தலில் ஆங் சாங் சூ கி போட்டியிடக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இச்செயலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.