2010-02-26 18:31:09

பிப்ரவரி 27 – வரலாற்றில் இந்நாள்


RealAudioMP3 விடுதலை இறையியலுக்கான முன்னுரை என்ற நூலில் அதன் ஆசிரியர் குஸ்தாவோ குட்டியரஸ் எனும் இலத்தீன் அமெரிக்க இறையியல் வல்லுநர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பற்றி எழுதும் போது பிற யூதமத குருக்களிடமிருந்தும் பிற மறைத் தலைவர்களிடமிருந்தும் இயேசுவின் போதனையான “பகைவரை அன்பு செய்” முற்றிலும் வேறுபடுகிறது என்கிறார். பழைய ஏற்பாட்டுச் சட்டமான அடுத்திருப்பவரை அன்பு செய்யவே தடுமாறும் கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் புதிய சட்டமாகிய “பகைவரையும் அன்பு செய்ய” நிறையவே முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. மோசேவின் திருச்சட்டத்தைக் கடந்து இயேசுவின் மலைப்பொழிவு நம்மை புதிய தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. புதிய வாழ்வு வாழ ஆசிக்கிறது.

காந்தியடிகள், அம்பேத்கார், திருத்தந்தை 2ம் ஜான் பவுல், நெல்சன் மண்டேலா எனப் பகைவர்களையும் அன்பு செய்து நமக்கு முன்னுதாரணமாகத் திகழும் இத்தகைய மகாத்மாக்களைப் போல நாமும் வாழ சிறிய முயற்சிகளை இத்தவக்காலத்தில் எடுக்கலாம்.

இப்படிப்பட்ட உயரிய முயற்சிகளே விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நம்மையும் நிறைவுள்ளவராக மாற்றும்.

முயற்சிகள் தேவை. உயரிய முயற்சிகள் மிகவும் தேவை.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என

முயற்சிப்பது கிறிஸ்தவர்களாகிய நமக்குத் தவக்கால அறைகூவல்.(அ.பணி.பவுல்ராஜ், சே.ச.)








All the contents on this site are copyrighted ©.