2010-02-26 15:21:38

உலகில் அணுஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்கு உலகத் தலைவர்கள் உழைக்குமாறு ஜப்பான் ஆயர்கள் அழைப்பு


பிப்.26,2010 உலகில் அணுஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்கு உலகத் தலைவர்கள் உழைக்குமாறு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவர் பராக் ஒபாமாவுக்கும் ஜப்பானிய அரசுக்கும் ஆயர்கள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில், அணுஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்குத் தைரியமுடன் நடவடிக்கை எடுப்பதற்கு இது ஏற்ற காலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அணுஆயுதங்கள், முந்தைய உலகப் போரில், ஒரு கணத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களைக் குடித்துள்ளது என்றும் அதில் தப்பியவர்கள் இன்றும் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் துன்பப்படுகின்றனர் என்றும் ஆயர்களின் கடிதம் கூறுகிறது.
Nagasaki பேராயர் Mitsuaki Takami மற்றும் Hiroshima ஆயர் Atsumi Misue எழுதியுள்ள கடிதத்தில், தற்சமயம் உலகில் இருபதாயிரத்துக்கு அதிகமான அணுஆயுதங்கள் இருக்கின்றன, அவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரலில் நடைபெறவுள்ள உலக மாநாட்டில் உலகத் தலைவர்கள் இதற்கு ஆவன செய்யுமாறு இந்த ஜப்பான் ஆயர்கள் கேட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.