2010-02-25 16:22:57

மக்கள் சக்தி நாள் தற்போது வெறும் கொண்டாட்டமாக மாறிவருகிறது - பிலிப்பின்ஸ் முன்னாள் ஆயர் Teodoro Bacani


பிப்.25,2010 இவ்வியாழனன்று அனுசரிக்கப்படும் மக்கள் சக்தி நாள் தற்போது வெறும் கொண்டாட்டமாக மாறிவருகிறது என்றும் 1986ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி நடந்த போது மக்கள் சக்தி மீது இருந்த நம்பிக்கை இப்போது தளர்ந்து வருகிறதென்றும் பிலிப்பின்ஸ் முன்னாள் ஆயர் Teodoro Bacani கூறினார்.
1986ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தேர்தலில் அன்றைய அரசுத் தலைவரான மார்க்கோஸ் மீண்டும் பதவி வகிப்பதை எதிர்த்து மக்கள் போராடியதும், அந்த போராட்டத்திற்கு உறுதுணையாக அப்போது மணிலாவின் பேராயராய் இருந்த கர்தினால் Jaime Sin இன்னும் பிலிப்பின்ஸ் ஆயர்கள் அனைவரும் அனுப்பிய சுற்று மடலும் மக்கள் சக்தியைத் திரட்டி மார்க்கோஸைப் பதவி விலகச் செய்தது. அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் சக்தி நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு, இந்த நாளை ஓட்டி, கடந்த ஒரு வாரமாய் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் மக்கள் நலம் பேணும் முகாம்களையும் மணிலா உயர் மறை மாவட்டம் நடத்திவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.