2010-02-25 16:22:22

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ள வன்முறைகள், திருச்சபை விழித்திருப்பதற்கு விடுக்கும் அழைப்பு - பேராயர் Stanislaus Fernandes


பிப்.25,2010 இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ள வன்முறைகள், திருச்சபை விழித்திருப்பதற்கு விடுக்கும் அழைப்பாக இருக்கின்றன என்று இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் Stanislaus Fernandes கூறினார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தியில் நடைபெற்று வரும் இந்திய ஆயர் பேரவையின் கூட்டத்தில் அறிக்கை சமர்பித்த இயேசு சபையைச் சார்ந்த பேராயர் Fernandes இவ்வாறு கூறினார்.
அடிப்படைவாத அச்சுறுத்தல் இல்லாத பகுதி என்று கருதப்பட்ட பகுதிகள், வன்முறைகளை எதிர் நோக்கியுள்ளன என்பது இந்தியத் திருச்சபைத் தலைவர்களையும், மற்றவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதென பேராயர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக ஒரிசாவில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இந்திய திருச்சபையின் நற்செய்தி அறிவிப்பு முறைகளை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு சிறப்பு குழுவை உருவாக்கக் காரணமாகியுள்ளன என்றும் பேராயர் கூறினார்."அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இளையோர்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் 164 மறை மாவட்டங்களிலிருந்து 163 ஆயர்கள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 40 இளையோரும் இதில் பங்கு பெறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.