2010-02-24 14:38:48

திருநற்கருணை புதுமை இடம் பெற்ற ஸ்பெயின் மறைமாவட்டம் ஒன்றிற்கு ஜூபிலி ஆண்டிற்கு அனுமதி திருப்பீடம் வழங்கியுள்ளது


பிப்.24,2010 வடகிழக்கு ஸ்பெயினில் இவோரா நகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற திருநற்கருணை புதுமையைக் கொண்டாடும் விதமாக ஜூபிலி ஆண்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது திருப்பீடம்.
தற்சமயம் 160 பேருக்குக் குறைவாகவே வாழும் சிறிய நகரமான இவோராவில் 1010ம் ஆண்டு பங்குத் தந்தையாக இருந்த அருட்பணி பெர்னார்டு ஒலிவர் என்பவருக்குத் திருநற்கருணையில் இயேசு உண்மையாகவே பிரசன்னமாய் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் இக்குரு திருப்பலி நிறைவேற்றிய போது திருப்பலிப் பாத்திரத்தில் இருந்த திராட்சை இரசம் உண்மையிலேயே மனித இரத்தமாக மாறியது. அது அங்கு விரிக்கப்பட்டிருந்த துணியை நனைத்து தரையிலும் வடிந்தது. இந்தப் புதுமை நடைபெற்ற ஆயிரமாம் ஆண்டை முன்னிட்டு இவோரா நகரை உள்ளடக்கிய மறைமாவட்டத்திற்கு இவ்வாண்டு ஏப்ரல் 10ம் தேதி, ஜூபிலி ஆண்டு தொடங்குகிறது. அது 2011ம் ஆம்டு மே மாதம் முதல் தேதி நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.