2010-02-23 14:43:32

ஹெயிட்டி நாட்டின் மக்களுக்கு உதவ 23 கோடி டாலர் நிதியை கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு திரட்டியுள்ளதாக அறிவித்தது


பிப்.23,2010 ஹெயிட்டி நாட்டின் அண்மை நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என விடுத்த அழைப்பிற்கு 23 கோடி டாலர் நிதி கிட்டியுள்ளதாக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்தது.

40 நாடுகளைச் சேர்ந்த காரித்தாஸ் அங்கத்தினர்கள் தனியார்களிடமிருந்து ஹெயிட்டி மக்களுக்கென 19 கோடியே 80 லட்சம் டாலர்களைத் திரட்டியுள்ளதாகவும், அரசுகளும் சில அமைப்புகளும் திருச்சபையின் ஹெயிட்டி உதவிப் பணிகளுக்கென 3 கோடியே 60 லட்சம் டாலர்களைத் தர இசைவு அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பணக்கார நாடுகள் முதல், காங்கோ, சொமாலியா என்ற ஏழைநாடுகள் வரை எண்ணற்றோர் தங்களாலான நிதியுதவிகளை ஹெயிட்டி நாட்டுக்கான திருச்சபை பணிக்கென வழங்கியுள்ளதாக உரைத்த சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga, நம்பிக்கை, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஹெயிட்டி நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு உதவும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.