2010-02-23 14:42:26

இளையோர் குறித்த இந்திய ஆயர்கள் கூட்டம்


பிப்.23,2010 இளைய தலைமுறையினரின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு எங்ஙனம் உதவுவது என்பது குறித்து இந்தியாவின் அனைத்து ஆயர்களும் அசாமின் குவாஹாத்தியில் கூடி விவாதிக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் பெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் இந்தியாவின் 160க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களின் ஆயர்களும் இன்றைய நவீன இந்தியாவில் அதாவது வேகமாக முன்னேறி வரும் இந்தியாவில் இளையோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பர்.

இன்றைய பிரச்சனைகளின் முன்னிலையில் சோம்பிவிடாமல் வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கு இளையோர்க்கு உதவ இந்திய ஆயர் பேரவை உழைக்கும் என்று இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்த பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் கூறினார்.

2020ம் ஆண்டில் உலகின் 25 வயதுக்குட்பட்ட இளையோருள் பாதிப்பேர் இந்தியாவில் இருப்பர் என்ற குவாஹாத்தி பேராயர் மெனாம்பரம்பில், இத்தகைய இளையோர் சக்தி எவ்விதத்திலும் வீணடிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதே இவ்வாயர் பேரவைக் கூட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று என்று கூறினார்.

இந்திய ஆயர் பேரவை கூட்டம் மார்ச் மாதம் 3ம் தேதி நிறைவுக்கு வரும்.








All the contents on this site are copyrighted ©.