2010-02-22 16:29:45

வரலாற்றில் இன்று இடம் பெற்றவை பிப்ரவரி 23


 632 – இறைவாக்கினர் முகமதுவின் கடைசி போதகம் இடம் பெற்றது.

1417 – திருத்தந்தை இரண்டாம் பவுல் பிறந்தார்.

1447 – திருத்தந்தை 4ம் யூஜின் இறந்தார்.

1455 – கியூட்டன்பெர்க் விவிலியம் வெளியிடப்பட்டது. நகரும் தட்டெழுத்துக்களால் அச்சடிக்கப்பட்ட முதல் மேற்கத்திய நூலாக இது வெளிவந்தது.

1821 – ஆங்கிலேயக் கவிஞர் ஜான் கீட்ஸ் இறந்தார்.

1893 - ருடால்ஃப் டீசல், டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1903 – கியூபா, குவாண்டானமோ விரிகுடாவை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.

1904 - அமெரிக்க ஐக்கிய நாடு, 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.

1905 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1919 - இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியைத் தொடங்கினார்

1941 – டாக்டர் Glenn T. Seaborg. என்பவரால் புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.

1947 - அனைத்துலக தரநிர்ணய நிறுவனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.