2010-02-22 16:33:36

பிப்ரவரி 23 தவக்கால சிந்தனை


RealAudioMP3 அலாய்சியஸ் பியரிஸ் என்னும் இலங்கை இயேசு சபை இறையியல் வல்லுநர் இறை வேண்டலைப் பற்றிக் குறிப்பிடும் போது, “இறை வேண்டல் என்பது பிறந்த குழந்தையானது பிறரின் எவ்வித உதவியும் இன்றி அன்னையின் மார்பில் பால் அருந்துவது போன்ற இதமான சுகம்” என்கிறார். இன்று இறை வேண்டல் பற்றி கருத்தரங்குகள், வழிமுறைகள், உதவிசெய் கருவிகள், கற்றுத்தர காளான்வகை குருக்கள் என இறை வேண்டலை எட்டாக் கனியாகப் பலரும் இன்றைய உலகில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இயேசு தனது சீடர்களுக்கு ஓர் அன்பான தாயைப் போல இருந்து இறை வேண்டலை இதமான சுகமாகக் கற்றுத் தருகிறார். இயேசுவின் இறை வேண்டலில்

தந்தையாகிய கடவுளின் புனிதம் வெளிப்படுகிறது.

அவரது இறையரசு வரவேற்கப்படுகிறது

அவரது இறைத்திருவுளம் நம்மில் நிறைவேற ஆவண செய்யப்படுகிறது.

வாழ்வின் ஆதாரமான உணவிற்கு அவரே உதவி செய்ய மன்றாடப்படுகிறது.

பாவங்களில் இருந்து முழுவிடுதலை பெற அவரில் அருள் வேண்டப்படுகிறது. தீமைகளில் இருந்து விலகி வாழ அவரது உதவி யாசிக்கப்படுகிறது.

இவ்வாறு நாம் கேட்கும் முன்னரே நமது தேவைகளைப் பூர்த்தி செய்திடும் தாயும் தந்தையுமான இறைவனிடம் நமது இறை வேண்டல் அவரையே மையப்படுத்தி அமைந்திட இயேசு இன்று நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார்.

நாம் பிதற்றத் தேவையில்லை வார்த்தைகளால்.

அவரது இருப்பில் இருந்தால் போதும் குழந்தையைப் போல (அருள்தந்தை பவுல்ராஜ், சே.ச.)








All the contents on this site are copyrighted ©.