2010-02-22 16:28:43

பிப்ரவரி 22 தவக்கால சிந்தனை


RealAudioMP3 சூஃபி கவிதை வரி ஒன்று:

குளத்திலே கல் எறிகிறேன்.

உடைந்து உடைந்து நானாக மாறுகிறேன்.

நான் யார்? என்னும் கேள்வி உலகின் அனைத்து தத்துவங்களிலும் அசைபோடப்படுகிறது. தத்துவார்த்தமான வார்த்தைகள் மட்டும் மிஞ்சக்கூடிய பதில்களில் முடிவடைகிறது.

ஆனால் இன்று இயேசு நம்மைப் பார்த்துக் கேட்பது “உனக்கு நான் யார்? என்பது. பேதுருவிற்கு இயேசு வாழும் கடவுளின் மகன்;. யோவானுக்கு இயேசுவே அன்பு; மகதல மரியாவிற்கு இயேசு ஓர் அன்பர்; பவுலுக்கு இயேசுவே கிறிஸ்து; திருச்சபையின் தந்தையர்க்கு இயேசுவே மீட்பு; அசிசியாருக்கு இயேசுவே ஏழ்மை; இஞ்ஞாசியாருக்கு இயேசு ஓர் ஏழையான அரசர்; சவேரியாருக்கு இயேசுவே மகிமை; போஸ்கோவிற்கு இயேசுவே இளமை; அந்தோணியாருக்கு இயேசுவே வார்த்தை; சிலுவை அருளப்பருக்கு இயேசுவே ஆன்மீக உயிர்நாடி; மார்கரித் மரியாளுக்கு இயேசுவே இதயம்; குழந்தை தெரசாவிற்கு இயேசுவே துன்பத்திற்கான அர்த்தம்; அன்னை தெரசாவிற்கு இயேசு ஓர் ஏழை;

இயேசு எனக்கு யார்? நமது கிறிஸ்தவ மறையானது கொள்கை-கோட்பாட்டை மையப்படுத்தியது அல்ல. மாறாக இயேசு கிறிஸ்து என்னும் ஓர் ஆளை மையப்படுத்தியது. அந்த இயேசு கிறிஸ்து எனக்கு யார்? பேதுருவைப் போன்று சரியான பதிலை நாம் நமது வாழ்வு அனுபவத்தில் இன்று தேடிக் கண்டடைய சிறு முயற்சி செய்யலாமே!

முயற்சி நல்லது. அதிலும்

இயேசுவைப் பற்றிய தேடல் முயற்சி மிகவும் நல்லது…!.(அருள்தந்தை பவுல்ராஜ், சே.ச.)








All the contents on this site are copyrighted ©.