2010-02-22 15:48:31

குழந்தைகளை மீட்டு உரியவர் வசம் ஒப்படைப்பதில்  இந்தியாவின் இரு கத்தோலிக்க மையங்களின் பங்கு


பிப்.22,2010 இந்தியாவின் தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கைவிடப்பட்ட 76 வடகிழக்கு இந்தியப் பகுதி குழந்தைகளை மீட்டு உரியவர் வசம் ஒப்படைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன இந்தியாவின் இரு கத்தோலிக்க மையங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி வழங்குகிறேன் என்ற உறுதி மொழியுடன் பெற்றோர் சம்மதத்துடன் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் இருந்து Protestant குரு ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் கன்னியா குமரி மாவட்டத்தில் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்பிக்கும் பணியை ஆற்றியுள்ளன கத்தோலிக்க மையங்கள்.பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் சரணாலயம் என்ற அமைப்பை நடத்தி வரும் குரு Joseph Johnsonன் உதவியுடன், Guwahatiன் சலேசிய மையமான Snehalaya வின் குரு Lucas Mark இக்குழந்தைகளை பெற்றோர் வசம் ஒப்படைத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.