2010-02-20 16:26:50

கிழக்குஆசியாவின் கடல்கள் நன்முறையில் பாதுகாக்கப்பட ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு அழைப்பு


பிப்.20,2010 கிழக்குஆசியாவின் கடல்கள் நன்முறையில் பாதுகாக்கப்படவில்லையெனில் அப்பகுதியின் பொருளாதாரம் வெகுவாய்ப் பாதிக்கப்படும் என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
கிழக்குஆசியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் மூன்று பாகத்தினரின் வாழ்க்கை, நேரிடையாகவோ மறைமுகமாகவோ கடல்பகுதியைச் சார்ந்து இருக்கின்றது என்றும், அப்பகுதியின் 80 விழுக்காட்டு உள்ளூர் உற்பத்தி கடற்கரை இயற்கை வளங்களைச் சார்ந்து இருக்கின்றது என்றும் UNEP யின் இயக்குனர் Achim Steiner கூறினார்.
கிழக்குஆசியாவின் கடல்களிலுள்ள பவளப் பாறைகளில் 40 விழுக்காடும், சதுப்புநிலத் தாவரவகைகளில் பாதியும் அழியும் ஆபத்தை எதிர் நோக்குகின்றன என்றுரைத்தார் ஸ்டெய்னர்.
இந்தப் பவளப் பாறைகள், ஆண்டுக்கு 11 ஆயிரத்து 250 கோடி டாலரையும் சதுப்புநிலத் தாவரவகைகள் 510 கோடி டாலரையும் வருமானமாக கொடுக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய கிழக்குஆசிய நாடுகளின் கடல்பகுதி உலகின் கடல்பகுதியில் 30 விழுக்காடாகும். இவை தேசிய நிர்வாகத்தின் கீழ் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.