2010-02-18 15:34:20

பிப்ரவரி 19 தவக்கால சிந்தனை வழங்குபவர் அருள்தந்தை பவுல்ராஜ், சே.ச.


RealAudioMP3 நோன்பு என்றால் என்ன? உணவு மறுத்து சிறிது பசியில் வாடுவது மட்டும் நோன்பு அல்ல. மாறாக, இறைத் திருவுளத்தை நிறைவேற்றி சமூக அக்கறையோடு அடுத்தவரின் நலம் காப்பதே நோன்பு எனப் பவைய ஏற்பாட்டு இறைவாக்கினர் எசாயா வழியாக இன்று மீண்டும் நமக்கு அறைகூவல் விடுக்கிறார் இயேசு.

அன்னை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை அவரே குறிப்பிடுவதைக் கேட்போம் : ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடம் வந்து “தெரேசா அவர்களே! ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் சில நாட்களாக வறுமையின் காரணமாக உணவில்லாமல் மிகுந்த கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நீங்கள்தான் உதவ வேண்டும்” என்றார். எனவே நான் ஒரு கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு அவர்கள் இல்லம் சென்று அவர்களிடம் கொடுத்தேன். நான் பசியின் கொடுமையை முழுமையாக அறிந்தவளில்லை. ஆனால் அகோரப் பசியின் தீண்டலை அவ்வீட்டுக் குழந்தைகளது கண்களில் பார்த்தேன். அரிசியைப் பெற்ற அந்த இந்துக் குடும்பத்துத் தாய் அதில் ஒரு பகுதியை வெளியே எடுத்துச் சென்றுவிட்டு திரும்பி வெறுங்கையுடன் வருவதைப் பார்த்து நான் அவளிடம் அந்த அரிசியை என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன். அந்தத் தாய் “பக்கத்து வீட்டு இசுலாமியக் குடும்பத்தில் உள்ளவர்களும் பசியால் வாடுவதால் ஒரு பகுதி அரிசியை அவர்களுக்குக் கொடுத்து வந்தேன்” என்று சொன்னாள்.

நோன்பு : ஏழைகளுக்கு நமது நிறைவில் இருந்து பிச்சை போடுவது அல்ல; மாறாக நமது உணவை, நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்வது.

நோன்பு : சமூக நீதியோடு அன்பு கூர்வது

நோன்பு : அனைத்து அடிமைத்தளைகளையும் ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவது








All the contents on this site are copyrighted ©.