2010-02-18 15:08:45

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட கத்தோலிக்கச் சிறுமி வழக்கில் இன்னும் சில தகவல்கள்


பிப்.18,2010 பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 12 வயது கத்தோலிக்கச் சிறுமி Shazia Masih கொலை வழக்கில் இன்னும் சில தகவல்கள் வெளி வந்துள்ளன.
பாகிஸ்தான் வழக்குரைஞர் Chaudry Muhammed Naseem இல்லத்தில் பணி செய்வதற்காக அனுப்பப்பட்ட  Shazia Masih அவளது பெற்றோருக்குத் தெரியாத வண்ணம் ஒரு அடிமையாக விற்கப்பட்டிருக்கலாம் என்றும், குழந்தைகளை இவ்வாறு விற்கும் மனித வியாபாரக் குழுக்கள் பல பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன என்றும் வத்திக்கான் செய்தி நிறுவனம் Fides  அண்மையில் கூறியுள்ளது.ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களிலுள்ள, சிறப்பாக ஏழ்மை நிலையில் இருக்கும் கிறிஸ்தவக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு நல்ல எதிகாலத்தை அமைத்துத்  தருவதாக அக்குழந்தைகளின் பெற்றோருக்குத் தவறான உறுதியளித்து, பின்னர் அக்குழந்தைகளைச் செல்வந்தர்கள் வீட்டில் அடிமைகளாக விற்று விடும் இடைத் தரகர்கள் பாகிஸ்தானில் அதிகம் உள்ளனர் என்றும், இது போன்ற சட்டத்திற்கு புறம்பான மனித வியாபாரம் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளதென்றும் இந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.