2010-02-18 15:09:22

உள்நாட்டு போரினால் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், ஹெயிட்டி மக்களுக்கு உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர்


பிப்.18,2010 கடந்த 26 ஆண்டுகளாக உள்நாட்டு போரினால் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், ஹெயிட்டியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர்.
இலங்கையிலுள்ள தலத் திருச்சபையும், பிற கிறிஸ்தவ சபைகளும் ஹெயிட்டிக்கான உதவிகளைச் செய்யுமாறு எழுப்பியுள்ள கோரிக்கைகளுக்கு இலங்கை மக்கள் உதவ முன் வந்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த இலங்கைப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தாங்கள் பல ஆண்டுகளாய் அனுபவித்து வரும் வேதனைகளால் இப்போது ஹெயிட்டி மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளைத் தங்களால் உணர முடிகிறதென கூறியுள்ளதாக இம்மக்களைச் சந்தித்த அருட்திரு Sigamoey கூறினார். போரினால் புலம் பெயர்ந்துள்ளவர்கள், போரில் சொந்தங்களை இழந்த குடும்பங்கள் இதுவரை காரித்தாஸ் அமைப்புக்கு 30,000 ரூபாய் அளித்துள்ளனர். இதுதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள கோவில்களில் ஒரு லட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் துன்புறும் மக்களிடமிருந்து வந்துள்ள இந்தத் தொகை விலைமதிப்பற்றது எனவும் காரித்தாஸ் அமைப்பின் மனித வள மேம்பாட்டுக்கான மையத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜெயக்குமார் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.