2010-02-18 15:08:29

VHP தலைவரின் கண்டனத்திற்கு பதில் கூறும் கட்டக் புபனேஸ்வர்  பேராயர்


பிப்.18,2010 சமுதாயத்தை மேம்படுத்தும் பிற காரியங்களில் கவனம் செலுத்தாமல், மீண்டும் மீண்டும் மதங்களுக்கிடையே பகைமை உணர்வை வளர்ப்பதே அடிப்படை வாத அமைப்புகளின் முயற்சிகளாக இருக்கிறதென கட்டக் புபனேஸ்வர் பேராயர் Rapael Cheenath கூறியுள்ளார்.
ஒரிசாவில் நடந்த வன்முறைகளுக்கு VHP மற்றும் பல அடிப்படைவாத குழுக்களே காரணம் என்று EU என்ற ஐரோப்பிய சமுதாய அவை ஒரிஸ்ஸாவில் அண்மையில் மேற்கொண்ட பயணத்தின் முடிவில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளதை அம்மாநில முதலமைச்சர் Naveen Patnaik  இத்திங்களன்று ஒரிசா மாநில சட்டசபையில் எடுத்துரைத்த போது, அதை வன்மையாய் கண்டித்து, VHPன் தலைவர் Ashok Singhal மறுப்பு தெரிவித்ததோடு, ஐரோப்பிய சமுதாய அவை ஒரிசாவில் பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் அனுமதி அளித்ததையும் திரு Singhal வன்மையாய் கண்டித்துள்ளார்.
இக்கண்டனத்திற்குப் பதில் கூறும் வகையில், பேராயர் Cheenath செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐரோப்பிய அவை எந்த மத அடிப்படையிலும் அமைக்கப்பட்ட குழு அல்ல என்றும், இந்த அமைப்புடன் இந்திய அரசு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல வழிகளிலும் தொடர்பு வைத்துள்ளது என்றும் ஆயர் சுட்டிக் காட்டினார்.
திரு Singhalன் கூற்றுகள் அறிவுப்பூர்வமானவை அல்ல என்றும், ஒரிசாவில் நடந்த வன்முறைகளுக்கு VHPயே காரணம் என்றும் சமூகப் பணியாளர் Dhirendra Panda கூறியுள்ளார். இதேபோல், ஒரிசா மாநில விவசாயம் மற்றும் கூட்டுறவுக்கான அமைச்சர் Damodar Rout ஒரிஸ்ஸாவில் கலகங்களை உண்டாக்குவது மட்டுமே VHPன் நோக்கமாக இருக்கிறதென்று கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.