2010-02-17 15:25:06

மியான்மாரின் இனச் சிறுபான்மையினர் மீது கூடுதல் ஒடுக்குமுறை: அம்னெஸ்டி அமைப்பு எச்சரிக்கை


பிப்.17,2010 மியான்மாரில், இந்த ஆண்டின் இறுதியில் நடக்க இருக்கும் தேர்தல் காரணமாக, அந்நாட்டில் வாழும் இனச் சிறுபான்மையினர், மியான்மாரின் ராணுவ ஆட்சியாளர்களிடமிருந்து கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரலாம் என்று, மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
மியான்மாரில் மனித உரிமைக்காக போராடி வருபவர்கள் கைது செய்யப்படலாம், சிறையிலிடப்படலாம், சித்திரவைதைக்கு உள்ளாக்கப்படலாம், சில சமயங்களில் கொல்லப்படலாம் என்று அதன் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மாரின் மொத்த மக்கள் தொகையில் நாற்பது விழுக்காடாக இருக்கும் இனச் சிறுபான்மையினர், மியான்மாரின் எதிர்க்கட்சிகளின் அரசியலில் முக்கிய பங்காற்றக்கூடும் என்று அந்த அமைப்பின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச சமூகனானது நொபல் பரிசு பெற்ற ஆங்சான் சூசி மற்றும் அவரது ஜனநாயக தேசிய கூட்டணி மற்றும் ஆயுதம் தாங்கிய தீவிர குழுக்கள் மீது அதிகமான கவனம் செலுத்திவருவதாக அம்னெஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.