2010-02-17 15:31:47

பிப்ரவரி 18 தவக்காலச் சிந்தனை வழங்குபவர் அ.திரு.பவுல்ராஜ் சே.ச.


RealAudioMP3 என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்கிறார் இயேசு இன்றைய லூக்கா நற்செய்தியில்(லூக்.9,22-25). அன்பானவர்களே, இத்தவக்காலத்தில் நாம் எவற்றைத் துறப்பது நாம் எவற்றை இழந்தால் நல்லது ஒரு சிறிய பட்டியல் முயற்சி செய்து பார்ப்போமே

குறை கூறுவதைத் துறக்கலாம் .... .................நிறைவுள்ளவர்களாக வாழலாம்.

தாழ்வு மனப்பான்மையைத் துறக்கலாம் உயர்தான்மையுடையவர்களாக வாழலாம்.

தீர்ப்பிடுவதைத் துறக்கலாம் .......நல்லெண்ணமுடையவர்களாக வாழலாம்.

அழுது புலம்புவதைத் துறக்கலாம் .......கடவுள் நம்பிக்கையுடையவர்களாக வாழலாம்.

நம்பிக்கையற்றதன்மையைத் துறக்கலாம்.....நம்மீதே நம்பிக்கை கொண்டவர்களாக வாழலாம்.

பகையுணர்வைத் துறக்கலாம் ......... அன்புறவோடு வாழலாம்.

எதிர்மறை எண்ணங்களைத் துறக்கலாம்.......நேர்மறையான எண்ணங்களோடு வாழலாம்.

தேவையற்ற காழ்ப்புணர்ச்சியைத் துறக்கலாம்..... சகோதர உணர்வோடு வாழலாம்.

பொறாமையுணர்வைத் துறக்கலாம் ...... பிறரும் நல்லவர்களே என வாழலாம்.

புறம்பேசுவதைத் துறக்கலாம் ..... நாவடக்க நல்லவர்களாய் வாழலாம்.

பாவத்தைத் துறக்கலாம்....... புண்ணியச் செயல்பாட்டில் வாழலாம்.

இன்றைய நாளில் இச்சிறிய பட்டியலை வாழ்ந்து பார்ப்போம். இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ நமக்குச் சிலுவைகள் தேவை. அன்றாட வாழ்வின் சிலுவைகள் சுமந்து இயேசுவைப் பின்பற்றுவோம்.








All the contents on this site are copyrighted ©.