2010-02-17 15:25:23

கார்னிவல் விழாவுக்கு ஒரு மாற்றாக பிரேசில் நாட்டின் பல மறைமாவட்டங்களிலும் செபம், இசை, தியானம் ஆகியவை கலந்த பல முயற்சிகள்


பிப்.17,2010 ஒவ்வொரு ஆண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் குதூகலமாக நடத்தப்படும் பிரேசில் நாட்டின் கார்னிவல் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்குப் பதிலாக, அங்குள்ள கத்தோலிக்கர்களில் பலர் கடந்த நான்கு நாட்களாய் செபத்திலும் தியானத்திலும் தங்கள் நேரத்தைச் செலவு செய்தனர்.
இச்செவ்வாயுடன் முடிவடைந்த இந்த கார்னிவல் விழாவுக்கு ஒரு மாற்றாக, பிரேசில் நாட்டின் பல மறைமாவட்டங்களிலும், கிறிஸ்தவ அமைப்புகளிலும் செபம், இசை, தியானம் ஆகியவை கலந்த பல முயற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வேறுபாடான ஒரு கார்னிவல் அனுபவத்தைத் தேடும் கத்தோலிக்கர்களை திரட்டி 2009ஆம் ஆண்டு Sao Paolo மாநிலத்தில் 70,000 கத்தோலிக்கர்கள் செபத்தை மையமாகக் கொண்ட ஒரு அனுபவத்தைப் பெற்றனர் என்றும், இந்த முயற்சியானது இந்த ஆண்டும் 60,000க்கும் மேற்பட்டோரை ஈடுபட வைத்தது என்றும் இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.